கட்டுநாயக்க 18வது மைல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விமான நிலையத்தினால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு விமான நிலையத்தைத் தவிர, ஏனைய தனியார் வாகனங்களும் அந்த இடத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை குறித்த நிரப்பு நிலையம் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.