ஶ்ரீ இராமர் ஜென்ம பூமியான இந்தியாவின் அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ஶ்ரீ ராமர் பாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
ஶ்ரீ ராமர் இலங்கையில் காற்தடம் பதித்த இடங்கள் தோறும் கொண்டு செல்லப்படவுள்ள இந்த புனித வௌ்ளிப் பாதங்கள் அயோத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
பாரதத்தை சேர்ந்த சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் அயோத்தியில் இருந்து ஶ்ரீ ராமரின் புனித பாதங்களை இலங்கைக்கு கொண்டுவந்தனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த யாத்திரிகர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கையில் ஶ்ரீ ராமர் பாதம் பதித்த இடங்கள் தோறும் இந்த புனித பாதங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
இதன்போது, சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், ஶ்ரீ ராமரின் புகழ் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.