இலங்கை மின்சார சபையினால் தமக்கு வழங்கப்பட்ட முறைசாரா மற்றும் வழக்கத்திற்கு மாறான மின் கட்டணம் காரணமாக கட்டணம் அதிகரித்து உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சரண வீதியில் வசிக்கும் அமைச்சர் ஒருவரின் வீட்டில் 83 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததாக வெளியான செய்திகள் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தாம் 7 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணத்தை செலுத்தியதாகவும், தாம் பொறுப்புள்ள நபர் என்பதாலேயே குழப்பமான சூழ்நிலையிலும் இவ்வளவு தொகையை செலுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையற்ற மின்கட்டணம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.