நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் மின் வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஈ.வலயத்துக்கு காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையும் எஃப் வலயத்துக்கு பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, மாலை 6 மணிமுதல் 8.30 மணிவரை ஈ வலயத்துக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை எஃப் வலயத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேர மின்வெட்டும், P,Q,R,S வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 8.30 மணிவரை T,U,V,W வலயங்களுக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை P,Q,R,S வலயங்களுக்கும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.