பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (03) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
இது பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் கூட்டமாக அமையவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்க உறுப்பினர்கள் குழு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழமை போன்று மீண்டும் கூடவுள்ளது.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் எதிர்தரப்பு அடுத்த வாரம் மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.