நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி மின்வெட்டு அமுலாகும் மண்டலங்கள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு.
சனிக்கிழமையன்று
P Q R S T U V W பிரிவுகளுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 3 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி நேரமும்.
EF பிரிவுகளுக்கு நாளை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 4 மணி நேரமும், மீண்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 மணி நேரமும்
ஞாயிறு அன்று
A B C பிரிவுகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மட்டும் மின்வெட்டு அமுலாகும்.
எனினும் 5ஆம் திகதி முதல் மின்வெட்டு இருக்காது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த அமைச்சரவையில் தெரிவித்திருந்ததுடன் ஜனாதிபதியும் அவ்வாறு கூறியிருந்தார்.