தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
ரஷிய படைகள் உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டைவிட்டு போலந்துக்கு தப்பி ஓடியதாக வதந்தி பரவியது. இதை மறுத்துள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி. இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் செல்வி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய ஜெலன்ஸ்கி, தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் கூறி உள்ளார். ‘நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் எனது பணிகளை மேற்கொள்கிறேன்’ என்றும் ஜெலன்ஸ்கி தனது செல்பி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் இருக்கும் கீவ் நகரில் இரவு பகலாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.