web log free
April 18, 2024

இலங்கையை கைவிட்டுள்ள சீனா உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடுகள்!

சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன்களையோ உதவிகளையோ வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளதாக வார இறுதி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல்வாதிகள் குழுவுடன் தற்போது இலங்கை வந்துள்ள இராஜதந்திரிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதில்லை என்ற தீர்மானம் இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக  சீன இராஜதந்திரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்திற்கான நிர்மாண ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை பிரதான பிரச்சினையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையும் இதற்குக் காரணம்.

இலங்கை தற்போது 16 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது. சீனா இலங்கைக்கு வழங்கிய பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் பெற்ற கடனையே திருப்பி செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை இந்தியாவிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்க நேரிடும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.