முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள காணியை, கடந்த 2ஆம் திகதியன்று துப்பரவு செய்து கொண்டிருந்த போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அனுமதிக்கப் பின்னர், அடையாளப்படுத்தப்பட்டிருந்த அந்தப் பகுதி, வெடிபொருள் செயலிழக்கும் சிறப்பு அதிரடிப்படையினரால், கடந்த 4ஆம் திகதி தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதலைப்புலிகளின் தயாரிப்பான “தமிழன் கைக்குண்டுகள்” 220 மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அழிப்பதற்கு நீதின்ற உத்தரவு வழங்கியுள்ளது.