முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் பிரதிவாதிகள் 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன், கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதிவாதிகள் 6 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைத் தவிர, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாவார்.