பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேயுடன் சென்ற குழுவினர், கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தின் மீது முட்டைகளை கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்த சிலர் முதலில் போராட்டத்தை ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகம் மீது முட்டைகளால் தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.
பொலிஸார் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமாரவின் வாகனத்தின் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.