பாராளுமன்றத்தில் இன்று (08) மோதல் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்னால், சமகி ஜன பலவேகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டததை அடுத்து , இன்று பாராளுமன்றத்தில் குழு மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் ,
அமைச்சர் பதவியில் இருந்து விமல வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இன்று முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளதாகவும் . மகிந்த ராஜபக்சவை அவமதிக்கும் வகையிலும் சவால் விடுக்கும் வகையிலும் விமல் வீரவங்ச நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ஆத்திரமூட்டும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலைகளில் ஒன்று இன்று சபையில் காரசாரமான விவாதமாக மாறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.