web log free
April 06, 2026

இரா.சம்பந்தன் - ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

இலங்கைக்காக ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம், குறித்தும், இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவையும், ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், சந்தித்துப் பேசியிருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd