மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்து விலைக்கான குழுவினால் விலையேற்றம் குறித்து தற்போது ஆராயப்படுவதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 25 தொடக்கம் 30 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நாணய மாற்று வீதத்திற்கு ஏற்ப மருந்துகளின் விலையை நியாயமான முறையில் அதிகரிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
டொலரின் பெறுமதிக்கு இணையாக நியாயமான முறையில் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று தீர்மானித்ததாகவும் இது தொடர்பில் மருந்து இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.