இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பரவுகின்ற தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை சீர்செய்ய தவறியதால் மத்திய வங்கி ஆளுநரை ஜனாதிபதி பதவி விலகக் கூறியதாகவும் பசில் ராஜபக்ஷவுடன் அவருக்கு முறுகல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வௌியாகி உள்ள நிலையில் ஜனாதிபதி ஊடாக் பிரிவு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.