கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனமொன்றுக்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக வந்த கப்பலிலுள்ள டீசலை சபுகஸ்கந்தவில் சேமித்து வைக்க முடியாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக டீசல் கப்பலில் இருந்த டீசலை முத்துராஜவெலயில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இந்த நிலையிலேயே இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.
எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் விநியோக வலையமைப்பையும் சீர்குலைத்துள்ள நிலையில், விநியோகத்தை சீரான முறையில் முன்னெடுக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.