ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இவ்வாறான மென்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு தழுவிய போராட்டங்களை உடனடியாக நிறுத்துமாறும், விரும்பினால் ஹிட்லராக மாறி அவ்வாறு செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.