மின்சாரக்கட்டணத்தை ஐம்பது வீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதா தகவல்கள் வெளியாகின்றன.
சமீபத்தைய எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக ஐம்பது வீத அதிகரிப்பினை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபை தற்போது ஒரு யூனிட்டிற்கு 9 ரூபாய் இழப்பினை எதிர்கொள்கின்றது முன்னர் ஒரு யூனிட்டிற்கான உற்பத்தி செலவு 15 ரூபாயாக காணப்பட்டது தற்போது 29 ரூபாயாக அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு முன்னர் இலங்கை மின்சார 35 வீத அதிகரிப்பினை கோரியிருந்தது.தற்போது 50 வீத அதிகரிப்பினை கோருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இழப்புகளை எதிர்கொள்ளாமல் பாதுகாப்பான நிலையில் மின்சாரசபை செயற்படுவதை உறுதி செய்வதற்கு கட்டண அதிகரிப்பு அவசியம் என மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டிணான்டோ தெரிவித்துள்ளார்.
ஒரு அலகி;ற்கான உற்பத்தி செலவு 29 ருபாயாக அதிகரித்துள்ள நாங்கள் 15 ரூபாய்க்கே விற்பனை செய்கின்றோம்,எங்களிற்கு ஒரு அலகிற்கு 9 ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் இந்த இழப்புகளை தவிர்ப்பதற்காக இலங்கை மின்சார சபை ஒரு அலகின் விலையை 25 அல்லது 26 ஆக அதிகரிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலை அதிகரிப்பு இலாபம் உழைப்பதை நோக்கமாக கொண்டதல்ல இழப்பை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.