web log free
September 08, 2024

இன்றைய மின் வெட்டு விபரம்

இன்று (22) மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 
அதற்கமைய, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில், 3 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடமும் மின் வெட்டும் அமுல்படுத்தப்படும்.
 
மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேரம் 40 நிமிடம் மின் வெட்டும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.