ஏப்ரல் 10ஆம் திகதிக்கு பின்னர், நாட்டில் மின்சார தடை ஏற்படாது என, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நான்கு மாதங்களில் எந்த குறைபாடுகளுமின்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான திட்டங்களை தற்போது மேற்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மின்சாரத்தை மக்கள் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றம் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை மறுநாள் முதல் மின்சார பிரச்சினைக்குத் தீர்வை வழங்கினாலும் நிரந்தரமான தீர்வு ஏற்படும் வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கோரியுள்ளார்.
இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, 500 MW மின்சாரத்தை தனியாரிடம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.