ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
பொருளாதார துறையில் மட்டுமல்லாது, சகல துறைகளிலும் நாடு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சி என்றும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை திருப்திப்படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.