web log free
December 22, 2024

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை

காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் உறுதிப்பத்திர வாடகை வீடு´ எனும் பெயரில் முன்மொழிவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு, கட்டுமானங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழிற்றுறை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் 04 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் 464 வீடுகளுடன் கூடிய 09 வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு ஆரம்பக் கொடுப்பனவை செலுத்துவதற்கான இயலுமை இன்மையால், மாதாந்தம் 15,000/- ரூபா வாடகைப் பணமாக 31 வருடங்களுக்கு அறவிடுவதற்கும், இரண்டாவது அல்லது மூன்றாவது பரம்பரைக்கு வீட்டு உரிமையை ஒப்படைக்கக் கூடிய வகையிலும், எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விற்பனை செய்வதற்கு இயலாத வகையிலும் பயனாளிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd