நாடாளுமன்றில் இன்றைய தினம் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்து ஆளும் கட்சி வரிசையிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி ஆசன வரிசையில் இன்று அமரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமயிலான ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.