ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
அத்தோடு, வடக்கு கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இன்னல்கள் தொடர்பிலும் தன்போது ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.