அரசாங்கத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை கண்டித்து இனவாத கருத்துக்களை முன்வைத்த தொலைக்காட்சி ஊடகவியலாளரை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.
கேள்வி- இந்த நெருக்கடிகளை பயன்படுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு குறித்து பேசுகின்றது ? தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீதான தடையை நீக்கவேண்டும் என கோருகின்றது-இவை உண்மையா?
ரணில்- தடைசெய்யப்பட்ட அமைப்புகள் என்றால் என்ன?
ஊடகவியலாளர் - விடுதலைப் புலிகளிற்கு நிதி வழங்கிய அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் – அவ்வாறான அமைப்புகள் பல தடை செய்யப்படவில்லை, இந்த தடை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைமுறைக்கு வந்தது, தடையை நீக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பிரச்சினை உருவாகின்றபோது நாங்கள் இனவாதத்திற்கு திரும்புகின்றோம், இது பழைய கதை.
ஊடகவியலாளர் – இல்லை தற்போது இது பற்றி பேசப்படுகின்றது
ரணில் இது குறித்து பேசப்படுகின்றது ஏனென்றால் கதைப்பதற்கு வேறு விடயங்கள் இல்லை,
மீண்டும் இனவாதத்தை பிராந்தியவாதத்தை பயன்படுத்த முயற்சி இடம்பெறுகின்றது- இதனால் என்ன பயன்? இதன் மூலம் மக்களிற்கு பெட்ரோல் கிடைக்குமா?
தற்போது நாங்கள் உண்மையை பற்றி பேசுவோம், அவர்கள் உள்ளுர் பற்றி பேசினார்கள், அவர்கள் தேசத்தை காப்பாற்றவேண்டிய தேவை உள்ளது என தெரிவித்தார்கள், அவர்கள் உயிர்த்த ஞாயிறு குறித்து கதைத்தார்கள்-
இவை அனைத்தையும் ஒருபக்கம் வைத்துவிடுவோம், தமிழ் மக்களிற்கு நியாயபூர்வமான பிரச்சினைகள் உள்ளன, எங்களின் பௌத்த மதகுருமார் கூட அவற்றிற்கு தீர்வை காண வேண்டும் என விரும்புகின்றனர்,
எங்களுடன் வர்த்தகங்களில் ஈடுபட்ட பல அமைப்புகளை இந்த அரசாங்கம் தடை செய்தது எனக்கு தெரியும்.
இதன் காரணமாக சுமந்திரன் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்கின்றார் அது நியாயமானது.
இதற்கு பின்னால் விடுதலைப்புலிகள் இல்லை,விடுதலைப்புலிகள் தற்போது இல்லை ,குண்டுவீச்சுகள் இடம்பெறுவது இல்லை,பயங்கரவாதம் இனி உருவாகாது,எனக்கு அது உருவாகாது.த டைசெய்யபப்பட்ட அமைப்புகளிடம் தற்போது பணம் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.