இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (30) நாடளாவிய ரீதியில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, எம்,என், ஓ,எக்ஸ், வை, இஸட் பிரிவுகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.