தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் மிரிஹான பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அங்கிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாமையினால் கொதிப்படைந்த மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், வீதி மூடப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையை அவதானிக்க முடிந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு முன்பாக நடத்தப்படும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூபிலி தபால் நிலையத்தில் இருந்து மஹரகம வரையான வீதியூடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அப்பகுதியில் தற்போது பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.