ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டிற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வீட்டிற்க்கு முன்பாக மக்கள் திரண்டதால் அதனை சூழவுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்திற்க்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை மற்றும் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.