உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வர்த்தகம் செய்து வரும் இரண்டு அந்நிய செலாவணி நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை வர்த்தகங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த நிறுவனங்கள் அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள சுவிஸ் பண பரிவர்த்தனை தலைமையகம் மற்றும் அதன் வெள்ளவத்தை கிளை மற்றும் வெள்ளவத்தையில் உள்ள வெஸ்டர்ன் மணி எக்ஸ்சேஞ்ச் பிரைவேட் லிமிடெட் ஆகியவை புதிதாக அடையாளம் காணப்பட்ட பணம் மாற்றும் நிறுவனங்களாகும்.
எச்சரிக்கை அறிவிப்புகள் மூலம் தமக்கு அறிவிக்கப்பட்ட பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் இடைநிறுத்தப்பட வேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.