web log free
March 03, 2026

ஞானா அக்காவை தேடிச் சென்ற ஹிருணிகா, நடந்தது என்ன?

அநுராதபுரத்திலுள்ள பிரபல ஜோதிடர் ‘ஞானக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று(சனிக்கிழமை) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்திலுள்ள ஞான அக்காவின் சோதிட நிலையத்திற்கு ஆதரவாளர்கள் குழுவுடன் சென்றுள்ளார். இதன்போது குறித்த குழுவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஞானா அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு பதற்றமான நிலை உருவானது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடராக ஞானக்கா இருந்து வருகின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd