web log free
March 02, 2026

விலை தொடர்பில் இன்று தீர்மானம்

இன்றைய தினம் பெரும்பாலும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும்.

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய விலைச்சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், எரிபொருள் விலையை திருத்தம் செய்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று ஒன்றுக்கூடவுள்ளது.

கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது, புதுவருடத்தின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்றைய எரிபொருள் விலை சீர்த்திருத்தின் போது எந்தவித விலை மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd