நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவும் காலத்தில் 79,200 லீற்றர் டீசல் கொண்ட மொத்தம் 12 பவுசர்கள் அம்பத்தளை நகரில் உள்ள CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது எனினும் இந்த டீசல் மக்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை என தெரியவருகின்றது .
மேலும் 36,000 லீற்றர் கொண்ட ஆறு பவுசர்கள் இன்று அதே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரியவருகின்றது.எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அப் பகுதி மக்களால் பல புகார்கள் வந்ததை தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டது ,கடந்த ஏழெட்டு நாட்களாக டீசல் வரவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்
விசாரணையின் மூலம் புதிதாக திறக்கப்பட்டஇந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஜனாதிபதி செயலகத்தின் பிரத்தியேக செயலாளர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என தெரியவந்தது . குறித்த பிரத்தியேக செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய எரிபொருள் இருப்புக்கள் அம்பத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்தது