ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .
கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது .
இன்றைய நாட்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்
சில பேக்கரி உரிமையாளர்கள் மீன் ரொட்டியை 120 ரூபாய்க்கும், ஒரு சாண்ட்விச் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்வதால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனியின் விலை 250 ஆகவும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூ.1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்