நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் இன்றைய தினம் கட்டளையிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரே இவ்வாறு சபை அமர்விலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலையியற் கட்டளையை கோடிட்டு காட்டிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறித்த இரு எம்.பிக்களையும் வெளியேற்றுமாறு படைகல சேவிதர்களுக்கு பணித்துள்ளார்.