" மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்" - என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (17) முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.
ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும், பெருந்திரளான மக்களும் குறித்த பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.
'போ' என்றதும், விடைபெற மறுக்கும் திருட்டு - ஊழல் கும்பலை, மக்கள் சக்தியால் விரட்டியடிப்போம் என பாத யாத்திரையில் பங்கேற்றோர் கோஷம் எழுப்பினர்.
" தேசிய மக்கள் சக்தியால் பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டாலும், இது மக்களுக்கான போராட்டமாகும். எனவே, அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரள வேண்டும்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் தோழர் ரில்வின் சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.
19 ஆம் திகதி பாத யாத்திரை கொழும்பை வந்தடையவுள்ளது.