web log free
June 28, 2025

முடிந்தால் என்னை பதவியில் இருந்து விலக்கவும் - மஹிந்த ராஜபக்ஷ சவால்

ஒவ்வொருவரும் கூறுவதற்காக தன்னால் பதவி விலக முடியாது எனவும், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'யாரேனும் என்னை அனுப்ப நினைத்தால் அனுப்பி காட்டட்டும்' என மஹிந்த கூறியுள்ளார். 

அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள் குழுவுடன் அலரிமாளிகையில் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd