web log free
September 08, 2024

ஆளும் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் கடும் குழப்பம்! ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம்

ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான இன்றைய சந்திப்பு மிகவும் காரசாரமான வடிவம் பெற்றுள்ளது.

கடும் வாக்குவாதத்திற்கு இடையே குழு கூட்டம் முடிந்தது. முக்கியமாக இடைக்கால அரசு குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இடைக்கால அரசாங்கம் தேவை இல்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, மொட்டுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும பிரதமராவதற்கு சதி செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள டலஸ் அழகப்பெரும, தான் எந்தவொரு சதிச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குடும்பப்பிரச்சினை எனவும் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குடும்பக் கதைகள் தேவையற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் ஒருபோதும் பிரதமரை பதவி விலகுமாறு கோரவில்லை எனவும், தனது சகோதரர் தன்னை விட பெரியவர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

113 இல் பிரச்சினை இல்லை எனவும், 113ஐ காட்டினால் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனக்கு 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.