அரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கம் செய்திருந்தார்.
இதன்போது, தமது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரசாங்க அச்சக திணைக்களத்தை ஜனாதிபதி கொண்டு வந்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த அரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக கயந்த கருணாதிலக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.