ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க அல்லது அரசாங்கத்தை அகற்றுவதற்கு ஆதரவளிக்கத் தயார் என அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய எம்.பி.க்களின் சுயேச்சைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர்கள், அரசாங்கம் இல்லாமல் நாட்டில் அராஜகம் ஏற்படுவது மோசமான அரசாங்கத்தை விட மோசமானதாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனால் அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தயார் என்றால் நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஆதரவாக வாக்களிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.