web log free
May 23, 2026

பழைய தொழிலை நவீனமாக்கிய இரு பெண்கள் கைது

இணையதளம் ஊடாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு - குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், கசகஸ்தான் மற்றும் சீன நாட்டு பெண்கள் பம்பலபிட்டி பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போது, குறித்த இணையத்தளம் டுபாயில் உள்ள ஒருவரினால் இயக்கப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd