web log free
May 14, 2026

கடவுச்சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கும்

ஒரு நாள் சேவை தவிர்ந்த கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் திங்கட்கிழமை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை வெளியிடுகையில், கடந்த வெள்ளிக்கிழமை (5) முதல் கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் சேவை செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd