web log free
September 14, 2025

ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடர் ஜானா அக்காவின் வீடு, ஹோட்டல் அனைத்தும் எரிந்து சாம்பல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரபுக்களின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் உணவகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று அரச தரப்பினர் பலரது வீடுகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்துடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd