நிட்டம்புவ பிரதேசத்தில் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அநுராதபுரம் நோக்கி சென்ற வேளை, நிட்டம்புவையில் மறைக்கப்பட்டுள்ளார். அங்கு இடம்பெற்ற அசம்பாவிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்து.
எனினும் பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.