நாட்டில் இன்று இரவு முதல் ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.