பெந்தோட்டாவில் உள்ள நட்சத்திர தரப்படுத்தப்பட்ட சுற்றுலா ஹோட்டலில் ஓய்வெடுப்பதற்காக இலங்கை வந்த 26 வயதான மியான்மர் பெண் ஒருவர் அருகில் உள்ள நண்பருடன் சாப்பிடும் போது தருவிப்பு செய்த பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் உணவகத்தன் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை பெந்தோட்டை பொலிசார் இன்று (16) காலை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஏப்ரல் 30 அன்று தனது நண்பருடன் இலங்கைக்கு வந்து, எல்ல வெல்லவாய, பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு சுற்றுலா சென்று மே 10 அன்று பெந்தோட்ட ஸ்டார் கிளாஸ் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அன்றைய தினம் வெசாக் போயாவை முன்னிட்டு அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உணவருந்த இரு பெண்கள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்போது இருவருக்கும் போதை கலந்து பானம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெண் போதையில் ஹோட்டலுக்கு சென்றுள்ளதுடன் மற்றைய பெண் காணாமல் போனதாக கூறப்பட்டது.
பின் இடம்பெற்ற விசாரணையில் வெளிநாட்டு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.