முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
22 பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.