web log free
March 29, 2024

பெற்றோலுக்காக பட்டினியுடன் வீதியில் சாதாரண மக்கள்! அரசியல்வாதிகளுக்கு பெற்றோல் சலுகை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு 121 ரூபா குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது வாகனஙகளுக்கு எரிபொருளை நிரப்ப வேண்டுமாயின் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மானிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டை அடுத்து, நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வினவி, பில்களை சரிபார்த்து, அந்தக் கூற்றுகள் பொய் என்பதை உறுதிப்படுத்தியதாக தொழிற்சங்க அதிகாரிகள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தனர். 

எம்.பி.க்களுக்கு ஒரு லிற்றர் ரூ.121க்கு எரிபொருள் விற்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் படங்கள் system upgrade இருந்தபோது படமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது எரிபொருளை விற்கும் விலை அல்ல என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது வாகன தாங்கிகளை நிரப்ப விரும்பினால், அவர்கள் வரிசையில் வருமாறும், விசேட முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என, தாம் அறிவித்துள்ளதாக CPC தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்தன.