லிட்ரோ நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க அரசாங்கத்திடம் மீண்டும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
விலை உயர்வு இறுதி செய்யப்பட்டால், 12.5 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.5,000 என்ற வரம்பை மீறும் என அரசாங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது அந்த அளவிலான கேஸ் சிலிண்டர் ரூ.4860க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால் தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது எனவும் விட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.