web log free
April 19, 2024

ரணில் - சம்பிக்க அரசியல் உறவு மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது பிரிவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் காணப்படும் ஒப்பந்தமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பிக்க சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராகி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் 21வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சம்பிக்க உள்ளிட்ட 43வது பிரிவு பகிரங்கமாக ரணிலுடன் இணையவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த காலங்களில் சம்பிக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வப்போது பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.