web log free
April 06, 2026

ஜனாதிபதி திருப்பதிக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, இன்று இந்தியா நோக்கிச் சென்றுள்ளார்.

குடும்பத்தினருடன், வழிபாடு செய்வதற்காக இன்று காலை 7.40 மணிக்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திருப்பதி பயணம் கடந்த வாரத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 11 September 2019 01:53
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd